பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது குல்தீப்புக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ததற்கு அஜின்கியா ரகானே விளக்கம் அளித்துள்ளார். சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகினர். பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக தமிழக வீரர் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பெரும்பாலான வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துவிட்ட நிலையில், குல்தீப் மட்டுமே ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் இருந்தார். அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட கேப்டன் ரஹானே, தொடர் முடிந்து, டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, குல்தீப்பை மறக்காமல் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இதற்கிடையே, இந்திய திரும்பியப்பின் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் போட்டியில், அந்த நாளில் யார் அணிக்குத் தேவையோ அதைக் கருத்தில் கொண்டே அணித் தேர்வு அமையும். குல்தீப் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி வாய்ந்த வீரர். அவரைத் தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும் என்பது கடினமான முடிவு. ஆனால், வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங் செய்ய முடியும் என்பதாலும், ஐந்து பெளலர்களுடன் களமிறங் வேண்டும் என்பதாலும், குல்தீப்பை எடுக்க முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் நல்ல பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்துவிட்டார் என்றார்.
எனவே, குல்தீப் மனநிலை எப்படி இருக்கும் என எனக்கு நன்றாக தெரியும். எனவேதான், அவரை ஆதரிக்க வேண்டியது என் கடமை என நினைத்தேன். அணியில் குல்தீப்பின் பங்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவேன். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. திறமையான வீரர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது ரொம்பவே முக்கியம் என்றும் ரகானே தெரிவித்தார்.