மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்துள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையே, இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 'வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என்று தெரிவித்தார். காங்கிரஸ் அறிவிப்பை பார்க்குபோது நாளை மத்திய கூட்டத்தொடரில் ஆளும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.