டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி கொச்சியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி, உத்தராகண்ட் மற்றும் உ பி ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று இக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.