வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

by Nishanth, Feb 5, 2021, 13:58 PM IST

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி டெல்லியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டும் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக உள்ளனர். இந்தப் போராட்டம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல சர்வதேச பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் கடந்த சில தினங்களாக விவசாயிகள் போராட்டம் எதிரொலித்து வருகிறது. புதிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் வேளாண் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த தயார் என்று இன்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் கூறியது: வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதற்காக இந்த சட்டம் தவறானது என்று யாரும் கருதி விட வேண்டாம். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டும் தான் இந்த சட்டத்தை குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தான் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது. ரத்தத்தால் விவசாயம் நடத்த காங்கிரசால் மட்டுமே முடியும் என்று அவர் கூறினார்.

You'r reading வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை