தொழில் துறையின் புதிய பரிமாணங்களில் ஒன்று ஓடிடி. இந்த வசதி மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு நிகழ்ச்சியை திரைப்படமோ தொடரையும் எந்த நேரமும் பார்க்கமுடியும். தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ஓ டி டி நிறுவனங்கள் இருக்கின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் ஓடிடி நிறுவனங்கள் வெளியிடும்.
திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு புதுப்புது ஓடி நிறுவனங்களை உருவாக்க வழி செய்து வருகிறது. அதே சமயம் இந்த ஓடிடி நிறுவனங்கள் மீது சமீபகாலமாக புகார்கள் அதிக அளவில் வரத் தொடங்கியிருக்கிறது.
ஓடிடியில் தணிக்கை செய்யப்படாத, மற்றும் ஆபாச நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி சமுதாய சீர்கேடுகளை உருவாக்குவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்