முறைகேடுகள் அதிகரிக்கிறது ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுக்கு ஆதார் கட்டாயம்

by Nishanth, Feb 2, 2021, 10:22 AM IST

சமீபகாலமாக முறைகேடுகள் அதிகரிப்பதால் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கு ஆதார் விவரங்களைக் கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.தற்போது வாகனப் பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட மோட்டார் வாகனத் துறையின் சேவைகளுக்கு விண்ணப்பதாரர்களின் போட்டோவுடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை விண்ணப்பத்துடன் வழங்கினால் போதும். ஆனால் சமீப காலமாக இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மோட்டார் வாகனத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

பினாமி பெயர்களில் வாகனங்களைப் பதிவு செய்வதும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஓட்டுனர் உரிமத்தைப் பெறுவதும் அதிகரித்து வந்தது. இதைத் தடுப்பதற்காக மோட்டார் வாகனத் துறை ஆதாரை கட்டாயமாக்கத் தீர்மானித்துள்ளது. ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தான் மோட்டார் வாகனத் துறையிலும் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்தது.இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.

மேலும் ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக் கேட்கப்பட்டது. இதன் பின்னர் மோட்டார் வாகனத் துறையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. இந்த மாத இறுதியில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. பழகுநர் உரிமம், உரிமத்தைப் புதுப்பித்தல், டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கும், சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கும் முதல் கட்டத்தில் ஆதார் கட்டாயமாக்கப்படும். மேலும் புதிய வாகனங்களின் பதிவு, உரிமையாளர் மாற்றம், முகவரி மாற்றம், என்.ஓ.சி. ஆகியவற்றுக்கும் ஆதார் தேவைப்படும். தற்போது வாகன உரிமையாளர் கைமாற்றம் முழுக்க முழுக்க ஆன்லைனில் தான் நடைபெறுகிறது. வாகன உரிமையாளரின் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் வரும் ஓடிபி எண்ணைத் தான் இதற்குப் பயன்படுத்த வேண்டும். இதில் முறைகேடுகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

You'r reading முறைகேடுகள் அதிகரிக்கிறது ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுக்கு ஆதார் கட்டாயம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை