தமன்னா போல் கலராக விரும்பும் பெண்கள்.. நடிகை ரோஜா சொன்ன ரகசியம்..

by Chandru, Feb 2, 2021, 10:38 AM IST

தமிழில் செம்பருத்தி, வீரா, ராஜமுத்திரை, காவலன், சகுனி, மாசானி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்த மணந்தார். தற்போது ஆந்திர அரசியலில் ஈடுபட்டு எம் எல் ஏவாக இருக்கிறார். இவர் நேற்று சென்னையில் நடந்த சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று நடந்த எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அகடமியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ரோஜா பேசியதாவது:சினிமாவில் நான் நடிக்க வந்தபோது என்னைப் பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட்டேன் என்றனர். ஆனால் என்னை சினிமாவில் அழகாகக் காட்டி, கலரும் கூட்டிக் காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். அவர்களால் தான பல நடிகைகள் வெற்றி நடிகைகளாக திகழ்ந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் மேக்கப் செய்பவர்களே நடிகைகள் போல் இருக்கிறார்கள். எல்ல பெண்களுக்கும் தமன்னா போல் கலராக இருக்க வேண்டும் என்று ஆசை உண்டு அதை மேக்கப் மூலம் செய்கிறார்கள். எனக்கு விஜயகுமார் என்பவர்தான் மேக்கப் மேனாக இருந்தார்.

இந்த விழாவுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி. வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதுபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்திருக்கிறார்கள். அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றி பெற்றதற்கு எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான். திரையுலகுக்கு வேண்டிய உதவிகளை தமிழ அரசு உடனுக்குடன் செய்கிறது.
இவ்வாறு ரோஜா பேசினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர்கள். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம்.புரட்சி தலைவர் படங்கள் பார்க்கச் செல்லும்போது அதில் டைட்டில் கார்ட் முதல் கொண்டு பார்ப்போம் ஒருவேளை டைட்டில் கார்டு பார்க்க முடியாமல் போனால் மீண்டும் அந்த படத்தை பார்போம். 50 முறை பார்த்த படங்கள் எல்லாம் இருக்கிறது.எனக்கு செய்தித் துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்தபோது அதில் என்னவெல்லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதைச் சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும் அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும் தவறுதலாகக் கைவைத்தால் ஷாக் அடித்து விடும் என்று அறிவுரை வழங்கினார்.

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் பெப்ஸி ஆர்.கே. செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்துத் தருவதாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார். அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார்.திரைப்படத் துறைக்கு விருது வழங்குவது பற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங்களுக்கு தலா ரூ 7 லட்சம் அளித்தார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டிருந்த போது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது, தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறேன்.இங்குக் கலந்துகொண்டு பேசிய ரோஜா எம் எல் ஏ ஆந்திரா வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்குப் பக்க பலமாக இருந்துசெயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டி யாக அம்மாதான் இருந்ததாகக் கூறினார். பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாகச் செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு என்ன தேவையென்றாலும் அரசிடம் கோரிக்கை வைத்துப் பெற்றுத் தருகிறார். இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாகச் செயல்பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல் பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது,நிகழ்ச்சியில் வருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரிகிரிசன் நன்றி உரையாற்றினார்.

You'r reading தமன்னா போல் கலராக விரும்பும் பெண்கள்.. நடிகை ரோஜா சொன்ன ரகசியம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை