சீனாவில் தயாரான ரயில்களைப் புறக்கணிக்க இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளரான இந்திகா தொடங்கொட இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய வகையில் இல்லை.
குறிப்பாகச் சீன ரயில் பெட்டிகளில் பிரேக்குகள் சரிவர இயங்குவதில்லை. சமீப காலமாக சுமார் 200 விபத்துகள் இந்த ரயில்களால் ஏற்பட்டுள்ளது.சீனாவில் தயாரிக்கப்படும் ரயில் வண்டிகளில் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரெயில் வண்டிகளை இயக்குவதைப் புறக்கணிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
சீன ரயில்கள் வேண்டாம் : இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு
Advertisement