திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா என்ற திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.'டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த திட்டத்தின்படி ஒரு நபருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இதன்படி நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து சேர வேண்டும்.
திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் பக்தர்கள், ஏழுமலையான் சிறப்புத் தரிசனம்,திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த தரிசன சுற்றுலா வசதி கிடைக்கும்.