குஜராத் மாநிலத்தில் இன் மாதம் 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.வதோதரா மாவட்டத்தில் உள்ள வின் நிஜம்புரா என்ற என்ற பகுதியில் நேற்று மாலை விஜய் ரூபானி பிரச்சாரம் செய்தார். அங்குக் கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிஷ்டவசமாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அவர் கீழே விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது .
இதையடுத்து பிரச்சார கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.தொடர்ந்து உடனடியாக அங்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மேடையிலேயே அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. அதன் பின்னர் டாக்டர்களின் ஆலோசனைப்படி அங்கிருந்து விமானம் மூலம் அகமதாபாத் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் ரூபானி பிரச்சாரத்தின் போது விஜய் ரூபானி மயங்கி விழுந்த தகவல் உடனடியாக பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது .
இதையடுத்து நரேந்திர மோடி விஜய் ரூபானியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். சில நாட்கள் நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் பணிகளைத் தொடருமாறு அவர் விஜய் ரூபானியை கேட்டுக் கொண்டார். தற்போது விஜய் ரூபானியின் உடல்நிலை நலமாக உள்ளதாகவும் சில நாட்கள் அவர் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.