மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வதோதரா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அங்குள்ள ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது பின்னர் விமானம் மூலம் அவர் அகமதாபாத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று காலை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

READ MORE ABOUT :