இன்று முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளின் படி இன்று முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையிலிருந்து பாதுகாத்து கொள்ள, வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுகிறது.வங்கி மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள், காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஏ.டி.எம்., மற்றும் பணம் மறுசுழற்சி இயந்திரங்கள், தடையில்லாமல் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றோர் வீட்டிலிருந்தே பணிப்புரிய அனுமதியளித்துனர். கொரோனா தொடர்பான, முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உட்பட, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.வாடிக்கையாளர்கள், வங்கிகளுக்கு நேரடியாக வருவதை தவிர்க்க, டிஜிட்டல் வங்கி சேவை தளத்தை அதிகம் பயன்படுத்த, வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.