துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு மம்தா பானர்ஜி, பன்வாரிலால் புரோகித் இரங்கல்

May 23, 2018, 08:27 AM IST

தூத்துக்குடி கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்திற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், “நான் பெங்களூரு சென்ற சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு மம்தா பானர்ஜி, பன்வாரிலால் புரோகித் இரங்கல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை