தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் சுமார் 3608 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பபட்டுள்ளது.
இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 8.97 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இம்முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 96.4 சதவீதமும் மாணவர்கள் 92.5 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5486 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம். இதைதவிர, அனைத்து பள்ளிகளுக்கும் இணைய முகவரில் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் ஒட்டி உள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் மாணவ மாணவியரின் பெற்றோர் செல்போன் எண்ணிற்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com