தூத்துக்குடி, திருச்செந்தூரில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு

May 23, 2018, 11:15 AM IST

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டதத்தில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மாபெரும் போராட்டம நடைபெற்றது. இதில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்தது. போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், போராட்டம் விஷ்வரூபம் எடுத்து, வன்முறையாக மாறியுள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டம் பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது.

இதனால், வரும் 25ம் தேதி காலை 8 மணி வரையில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு சட்டம் & ஒழுங்கை பராமரித்திட் இன்று (23.05.2018) முதல் 25.05.2018 காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும் சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்குமு, வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், பள்ளி&கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தூத்துக்குடி, திருச்செந்தூரில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை