காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் ரஜினியின் காலா படத்தை திரையிட முடியாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அங்குள்ள ரஜினி ரசிகர்களை இது கவலை அடைய செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், "காலாவும், காவிரிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது...? காலா படத்தை வெளியிடாமல் தடுத்து என்ன செய்யப் போகிறோம்...? காவிரி குறித்த ரஜினியின் கருத்து பாதித்தது உண்மை தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையது, இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும்" என பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
“மக்களுக்கு இது வேண்டும், இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்” எனவும் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.