ஆப்ரேஷன் புளூ ஸ்டாரின் 34 நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனி நாடு கோரி, பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய சீக்கியர்கள், 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குள் பதுங்கினர்.
பலமுறை எச்சரித்தும் அவர்கள் வெளியேறாததால், பொற்கோயிலுக்குள் இருந்து அவர்களை வெளியேற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' என பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் 34-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அமிர்தசரஸ் நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொற்கோயிலை சுற்றி அதிரடிப்படை மற்றும் பஞ்சாப் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.