மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’(Association of Malayalam Movie Artists) வில் இருந்து நடிகர் திலீப் விலகினார்.
மலையாள நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்ற நடிகர் தீலிப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தில் இருந்து விலகினார். நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் அம்மா சங்கத்தில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், திலீப் தானாக முன்வந்து சங்கத்தில் இருந்து தற்போது விலகியுள்ளார். இது தொடர்பாக அம்மா நடிகர் சங்கத்திடம் அவர் அளித்த கடிதத்தில், "நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை.
என்னால் 'அம்மா' அமைப்பை பலர் அவதூறாக பேசுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார்.