உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாக்-அவுட் சுற்று நாளை துவக்கம்

by Isaivaani, Jun 29, 2018, 12:21 PM IST

21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் 14ம் தேதி தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. தற்போது ஆட்டங்கள் மேலும் சூடு பிடிக்க நாக்-அவுட் சுற்றுக்கு சென்றுள்ளது.

16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெரும் 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி லீக் போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வியுடன் லீக் சுற்றில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ள 16 அணிகளில் 6 அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பையை வென்றுள்ள அணிகளாகும். பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் என 6 முன்னாள் சாம்பியன்களும் நாக் அவுட்டில் மோதவுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுகள் நாளை துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளன. கூடுதல் தகவலாக, கடந்த 3 உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற அணி முதல் லீக் போட்டிகளிலே வெளியேறியுள்ளது. 2010ல் இத்தாலி அணி வெளியேறியது. 2014ல் ஸ்பெயின் அணி வெளியேறியது, தற்போது ஜெர்மனி அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாக்-அவுட் சுற்று நாளை துவக்கம் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை