பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை தனியார் நிறுவனம்னான ஸ்பைஸ்ஜெட் துவக்கியுள்ளது. ஏற்கெனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையை இயக்கி வந்தாலும் அது நேரடி சேவையாக இல்லாமல் சென்னை மார்க்கமாக சொல்லும்படி இருந்தது.
அதன்படி, விமான சேவை இரவு 9.55 பெங்களூரில் இருந்து புறப்பட்டு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும். அதன், பின்னர் அங்கிருந்து மறுநாள் காலை 7.50 க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு காலை 9.20 க்கு தூத்துக்குடி சென்றடையும்.
அனால், தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு 3.30மணிக்கு சென்றடையும்.
பின்னர் துத்துக்குடியில் இருந்து 4 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்திற்கு 5.15 மணிக்கு வந்தடையும். தினசரி ஒருமுறை மட்டுமே இந்த நேரடி சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்களின் பயன்பாட்டை பொருத்து சேவையை மேலும், நீடிப்பது குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.