கால்பந்து நாக் அவுட் சுற்று: காலிறுதியில் நுழைந்த ரஷ்யா, குரோஷியா

by Isaivaani, Jul 2, 2018, 07:46 AM IST

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் காலிறுதி சுற்றில் நுழைந்துள்ளது.

;ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடந்து வருகிறது. அணிகளுக்கு இடையேயான போட்டிகள் முடிந்து தற்போது நாக் அவுட் சுற்று நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகளுக்கு இடையே நாக் அவுட் சுற்றுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்தார்.

பின்னர், ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் எரியம் டியுபா ஒரு கோ, அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

இதன் பிறகு, கூடுதலாக வழங்கப்பட்ட 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியாக, பெனால்டி ஷ¨ட் முறையில் முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் ஒரு கோல் அடித்தது. தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகள் தலா ஒரு கோல் அடித்தது. இதன் மூலம், 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையானது.

இதை தொடர்ந்து, ஸ்பெயினின் கோலை தடுத்து நிறுத்திய ரஷ்ய அணி தனது வாய்ப்பில் கோல் அடித்தது. இதனால், 3-3 என சமமானது. பின்னர், ஸ்பெயினின் கோலை ரஷ்யா தடுத்ததால் 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றிப்பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

இதேபோல், நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாவதாக, குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் இடையே நாக் அவுட் சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
இதில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்ல. பெனால்டி ஷ¨ட் முறையில், இரு அணிகளும் அவர்களது வாய்ப்பின்போது அடிக்கப்பட்ட கோல்கள் எதிரணியினரால் தடுக்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது வாய்ப்பில் டென்மார்க் அணி கோல் அடித்தது. இதனால், 1-0 என்ற கோல் கணக்கு ஆனது. இதேபோல், குரோஷியா அணி ஒரு கோல் அடித்து 1=1 என சமநிலை ஆனது.

இதேபோல், மூன்றாவது வாய்ப்பில் குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் மீண்டும் தலா ஒரு கோல் அடித்தனர். இதில், 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையானது.
டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா அணியின் கீப்பர் கோலை தடுத்துவிட்டார். இதனால், 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா அணி காலிறுதிக்கு முன்னேறியது.

You'r reading கால்பந்து நாக் அவுட் சுற்று: காலிறுதியில் நுழைந்த ரஷ்யா, குரோஷியா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை