உலகளவில் டெல்லிக்கு 3வது இடம்: காற்று மாசுவால் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

Jul 15, 2018, 21:36 PM IST

உலகில் மாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது.

தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த் ஆராய்ச்சியாளர்கள் மும்பை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து காற்றால் அதிக மக்கள் உயிரிழக்குமு நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் முடிவில், 2016ம் ஆண்டில் டெல்லியில் மட்டும் 14,800 பேர் காற்று மாசுவால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, உலகளவில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது.

ஆனால், முதல் இரண்டு இடங்களில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில், பெய்ஜிங்கில் 18,200 பேரும், ஷாங்காய் 17,600 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், கராச்சியில் 7,700 பேரும், மும்பையில் 10,400 பேரும், கொல்கத்தாவில் 7,300 பேரும், பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4,800 பேரும் மாசடைந்த காற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

You'r reading உலகளவில் டெல்லிக்கு 3வது இடம்: காற்று மாசுவால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை