2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடு எது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டிற்கு மட்டும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொறு நாட்டின் பொறுப்பின் கீழ் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, இம்முறைக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. லீக், காலிறுதி, அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து இறுதி போட்டி நடைபெறும் நிலையில் அடுத்ததாக 2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உலகக்கோப்பை கால்பந்தை பிப்பா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைத்தார். பின்னர், இதனை கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம் ஒப்படைத்தார்.