உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. லீக் போட்டி, காலிறுதி போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு பிரான்ஸ் மற்றும் குரோசியா அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகுத்தது. தொடர்ந்து, 2வது பாதியில் இரு அணி வீரர்களும் அனல் பறக்கும் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, 48வது நிமிடத்தில் குரோசியா வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் அணி கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். தொடர்ந்து, 59வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பின்னர், போக்டா அடித்த பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்ததை அடுத்து அவர் கோல் போட்டார். இதனால், 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்து வந்தது.
தொடர்ந்து, 65வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாலை மப்பே அபாரமாக விளையாடி கோலாக்கினார். இதனால், பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர், பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அஜாக்கிரதையால் குரோசியா வீரரின் கால் மீது பட்டு ஒரு கோல் கம்பத்திற்குள் போனது. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது.
இதன் பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபாரமாக வெற்றிப்பெற்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெள்வது குறிப்பிடத்தக்கது.