உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதப் பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த போது சம்பந்தமே இல்லாத ஒரு அமைப்பைச் சேர்ந்த கும்பல் இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.
போபாலைச் சேர்ந்த அந்த முஸ்லீம் இளைஞரும், அவர் மணமுடிக்க இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இந்துப் பெண்ணும், திருமணப் பதிவு செய்யும் நோக்கில், காஸியாபாத் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல் தரதரவென நீதிமன்ற வளாகத்திலிருந்து இழுத்து வந்து தாக்கியது.
சம்பவ இடத்துக்கு போலீஸ் வரும் வரை அந்த நபரை கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியது. பின்னர் போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாண்டே, 'இது தொடர்பாக வினோத் மற்றும் நவ்நீத் என்ற இருவர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.