ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

Sep 5, 2018, 09:53 AM IST

ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ஸ்டார்ட் போன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா வாக்குறுதி அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஒரு கோடி குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா அறிவித்துள்ளார். குறிப்பாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் குடும்பங்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.1000 இரண்டு தவனையாக வழங்கப்படும் என்றும் ஸ்டார்ட் போன் உற்பத்தியாளர்களால் அமைக்கப்படும் சிறப்பு முகாம்களில் ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்கு ரூ.500, தொலைபேசியை இணைத்து செயலியை பதிவிறக்கும்போது, இரண்டாவது தவணை ரூ.500 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை