உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வெள்ளம் பெருக்கெடுத்து சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறுகளில் அபாய அளவைவிட வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் கரையோர மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் சூழ்ந்த பஸ்தி, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், தொடர் கனமழை, இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.