சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் 3வது சுற்றிலும் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் 15,868 வாக்குள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிப்பெறுவது தற்போது உறுதியாகி உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், டிடிவி தினகரன் ஆதரவளர்கள் அவரது வீட்டின் முன்பு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே. நகர் முடிவுகள் பிரதிபலித்துள்ளது” என்றார்.
ஏழரை கோடி மக்களின் உணர்வு தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு- டிடிவி தினகரன் பேட்டி
Advertisement