சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் 30வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மதிமுக தலைவர் வைகோ மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.