கர்நாடகாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர், தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூருவை ஒட்டியுள்ள ராம் நகர் என்ற பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முனீர் என்ற ஸாகிதூள் இஸ்லாம் என்ற நபரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் திபெத்திய புத்த மதத்தின் தலைவர் தலாய்லாமாவை கொள்ள திட்டமிட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தங்களின் விசாரணை அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டு உள்ளார்கள்.
தலாய்லாமா கர்நாடகாவிற்கு வரும்போது அவரை கொல்ல திட்டமிட்டு பீகாரிலிருந்து வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலாய் லாமாவை கொல்ல திட்டமிடுதல் இருந்ததாக கூறப்படும் முனீர் என்பவர் மீது ஏற்கனவே பெங்களூரு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், பல்வேறு அமைப்புகள் உள்ளது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஒருவேளை எங்களது உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கலாம் முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் பதில் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.