பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

by Isaivaani, Oct 4, 2018, 17:01 PM IST

பெட்ரோல், டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டு வருவதால், அதனை சமாளிக்கும் வகையில், எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், கலால் வரியில் ரூ.1.50ம் குறைத்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையில் மொத்தம் ரூ.2.50 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை மாற்றத்தால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டு வருகிறது. இதுவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.

இதனால், மத்திய நிதி அமைச்சர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகைள எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஆலேசனை நடத்திய நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாயும் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைகிறது.

இதேபோன்று, மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். அப்படி குறைக்கும் பட்சத்தில், மெத்தம் ரூ.5 குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை