விழுப்புரம் அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தில் நீர் ஒழுகியதால் மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
மேல்மலையனூரை அடுத்துள்ள கெங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 29 மாணவர்கள் பயன்றுவருகின்றனர். கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், அதனை சீரமைக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்த நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சேதமடைந்த கட்டிடம் வழியாக மழைநீர் ஒழுகியதால் அங்கிருந்த கல்வி உபகரணங்கள் நனைந்தவிட்ட நிலையில் மாணவர்கள் குடையை பிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
ஒரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் கனமழை தொடங்கினால் மாணவர்கள் மற்றும் பள்ளியின் நிலை என்னவாகும் என்றும் பெற்றோர் ஆசிரியர்கள் கவலை அடைந்து உள்ளார்கள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.