உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்தியாவில் விரைவில் வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு தலைமை அதிகாரியை நியக்க உள்ளது.
வாட்ஸ்-அப் நிறுவனம் இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கமல் மற்றும் இந்தியாவின் சட்டஙளுக்கு உட்படாமல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற நிறிவனங்களிடமிருந்து வரும் பிரச்சனைகளை கையாளும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமித்திருப்பதைச் சுட்டிக்கட்டியதுடன்,வாட்ஸ்-அப் நிறுவனம் இந்திய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுவதில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் வாட்ஸ்-அப் ஒரு வெளி நாட்டு நிறுவனம் ஆனால் அது இந்தியாவில் ஒரு அலுவலகம் கூட இல்லாமல் பொறுப்புக்கு ஒரு அதிகாரியையும் நியமிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை வசதியையும் அளிக்கிறது" என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 27ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், வாட்ஸ்-அப் நிறுவனம் சார்பில் இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கப்படாது குறித்து விளக்கம் அளிக்க மத்தி அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் நிதித்துர்றைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் விளைவாக இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்-அப் நிறுவனம் இந்தியாவில் தலைமை அதிகாரியை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.