மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்படும் சபரிமலை! நவம்பர் 6 வரை 144 தடை

Sabarimala Pooja:Section 144 imposed Sabarimala today till november 6

by Manjula, Nov 3, 2018, 12:36 PM IST

அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில் ஜப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் நடை திறக்கப்பட்டபோது கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுக்க போராட்டங்கள் முன்வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து எற்பட்ட வன்முறையை கேரளாவை கலவரபூமியாக மாற்றியது, கேரள முதல்வர் இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் யின் திட்டம் என்று குற்றம்சாட்டினார் மேலும் பெண்களுக்கு ஆதரவாக பாதுக்காப்பு ஏற்படுகளை செய்து கொடுத்தது கேரள அரசு.உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு பெண் பக்தரும் சாமி தரிசனம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 22 அன்று அதன் நடை சாத்தப்பட்டு விட்டது. 

இந்நிலையில் மண்டல பூஜைக்காக இன்று(3.11.2018) சபரிமலை நடை திறப்பதால், நள்ளிரவு முதல் நவம்பர் 6ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 5ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் இதனால் பம்பை, நிலக்கல்,இலங்கவுல் மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூஜையின் போது சட்டம் ஒழுங்கு பாதிப்படையாமல் இருக்க தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வத என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு மனு நவம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

You'r reading மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்படும் சபரிமலை! நவம்பர் 6 வரை 144 தடை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை