ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர்மல்க பொன். ராதாகிருஷ்ணன் வழிபாடு- வைரல் வீடியோ

Pon nRadhakrishnans sabarimala yatra video goes viral

by Mathivanan, Nov 21, 2018, 17:13 PM IST

சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்ணீர்மல்க உருகி வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் தமது ஆதரவாளர்களுடன் இன்று சபரிமலைக்கு சென்றார். நிலக்கல் பகுதியில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

pon radhakrishnan at sabarimalai

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்தில் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஐயப்பன் சன்னிதானத்துக்கு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன். அங்கு சன்னிதானத்தில் கண்ணீர்மல்க உருக்கமுடன் பொன். ராதாகிருஷ்ணன் வழிபட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

You'r reading ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர்மல்க பொன். ராதாகிருஷ்ணன் வழிபாடு- வைரல் வீடியோ Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை