நடப்பு நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி ரூ.1000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இரண்டாவது இடத்தை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெறுகிறது. இந்த கட்சியின் வருவாய் ரூ. 681 கோடியில் இருந்து ரூ.717 கோடியாக அதிகரித்துள்ளது.திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 291 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுவே கடந்த ஆணடு ரூ. 262 கோடியாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ. 104 கோடி கிடைத்துள்ளது. அதாவது பாரதிய ஜனதா கட்சியின் வருவயில் 10 சதவிகிதம்தான்.காங்கிஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் இன்னும் தங்கள் வருவாய் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை.
பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் கோபால் அகர்வால்,'' பாரதிய ஜனதா கட்சி நிதி வரும் காரணிகளை வெளிப்படையாக வைத்துள்ளது. ஆன்லைன், செக் வழியாக நிதி கிடைக்கிறது. தற்போது, நமோ ஆப் வழியாகவும் கட்சிக்கு நிதி அளிக்கின்றனர். சில கட்சிகள் இன்னும் தங்கள் பேலன் ஷீட்டை கூட தயார் செய்யவில்லை. கருப்புப்பணம் அவர்களிடத்தில் இருப்பதாக கருகிதுகிறேன். பாரதிய ஜனதாவை பொறுத்த வரை ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துள்ளோம் ''என்கிறார்.
தற்போது நாட்டிலேயே பணக்காரக் கட்சி பாரதிய ஜனதா!