விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திருப்பி செலுத்துகிறேன், அதை பெற்றுகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பொது வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரது ரூ13,900 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
இங்கிலாந்து நீதீமன்றத்தில், லண்டனில் உள்ள விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்க படுகின்றது.
அதனோடு விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகள் உலகளாவிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது இங்கிலாந்து நீதிமன்றம்.
இந்த நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
"கிங்பிஷர் நிறுவனம் விமான எரிபொருள் விலை ஒரு பீப்பாய் 140 டாலர்களாக அதிகரித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கியில் கடனாக வாங்கிய பணம் நஷ்டமானது. நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்.
கர்நாடக நீதிமன்றத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தி விடுவதாக கூறியதை பற்றி யாரும் வெளியில் சொல்லாமல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தொடர்ந்து எனக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றன. இது முற்றிலும் தவறானது " எனக் கூறியுள்ளார்.