அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக கோவை, சென்னை மற்றும் திண்டிவனத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன் மற்றும் கோவையைச் சேர்ந்த ஆஷிக், அன்வர், பைசல் ஆகியோர் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த 7 பேருக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறது என்பதும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றச்சாட்டு.
இதையடுத்து 7 பேரும் தேசவிரோத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை மற்றும் திண்டிவனத்தில் இந்த சோதனை நடைபெற்றது.