கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக இ-மெயிலில் மிரட்டல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப் போவதாக இ-மெயிலில் தொடர்ந்து மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சவால் விட்டதால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் குர்கிராமில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். கடந்த வாரத்தில் அடுத்தடுத்து 3 முறை கெஜ்ரிவாலின் இ-மெயில் முகவரியில் அவருடைய மகளை கடத்தப் போவதாக மிரட்டல் விட்டுள்ளனர்.

உங்கள் மகளை கடத்தி, கெடுதலும் செய்யப் போகிறோம். காப்பாற்ற முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும் என்றும் இ-மெயிலில் சவால் விடப்பட்டதால் டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் மகள் வெளியில் செல்லும் போது உடன் நிழல் போல் பாதுகாப்புக்கு போலீசாரும் செல்சின்றனர்.

இ-மெயிலில் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்