மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தை வழிப்பறித் திருடன் என்று விமர்சித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பென்ட் செய்தார். இதனைக் கேள்விப்பட்ட கமல்நாத் சஸ்பென்ட் உத்தரவு வேண்டாம். மன்னித்து விடுங்கள் என்று பெருந்தன்மை காட்டியுள்ளார்.
ம.பி.மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் முகேஷ் திவாரி . இவர் பொது இடத்தில் கமல் நாத்தை வழிப்பறித் திருடன் என விமர்சித்த வீடியோ பதிவு வைரலானது. இதனால் தலைமை ஆசிரியரை சஸ்பென்ட் செய்தார். சஸ்பென்ட் பற்றி தகவல் அறிந்த கமல்நாத் தலைமை ஆசிரியரை மன்னித்து, சஸ்பென்ட் நடவடிக்கையையும் ரத்து செய்ய உத்தர விட்டுள்ளார். நான் பேச்சு சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவன்.
ஆனாலும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்மை மோசமான வார்த்தையால் விமர்சித்த ஆசிரியரின் செயல் தவறுதான். ஆனால் அவரை சஸ்பென்ட் செய்வதால் அவருடைய குடும்பமே கஷ்டப்படும். அந்தக் குடும்பம் மீள நீண்ட காலம் ஆகலாம். அதனால் அவரை மன்னிக்க விரும்புகிறேன்.
ஒரு ஆசிரியரின் பணி மாணவர்களுக்கு நல்ல கல்வியை போதிப்பது என்பதை அவர் புரிந்து கொண்டால் போதும் என்று பெருந்தன்மை காட்டி சஸ்பென்ட் நடவடிக்கை வேண்டாம் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார் கமல்நாத் .