நாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு?

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது சிஎஸ்கே. இரு அணிகளும் 24 முறை நேருக்குநேர் மோதியதில் சிஎஸ்கே 15 முறை வென்று அதிக்கம் செலுத்தியுள்ளது.

முதல்போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. கடந்த ப்ளேயிங் 11னில், 11 பேரும் பேட்டிங் திறமை பெற்றவர்களாக இருந்தனர். கடந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் ருத்து ராஜ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 7 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நான் ஜோடை போகமாட்டேன் என்பதுபோல் மொயீன் அலி 24 பந்தில் 36 ரன்கள் விளாசினார். ரெய்னா அணிக்கு பலம் சேர்த்தார்.
சுட்டிப் பையன் சாம் கர்ரன் 15 பந்தில் 34 ரன் விளாசி சிஎஸ்கே 188 ரன்கள் எட்ட உதவினார்.

இதனால் டோனியின் டக் அவுட் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடேயில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் சென்னை பந்து வீச்சை பஞ்சாக பறக்க விட்டனர். தீபக் சாஹர், கர்ரன், ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ என ஆறு பேர் பந்து வீசியும் பலனில்லை. பந்து வீச்சில் ரன்களை வாரி இறைத்தனர். சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, பெரேண்டர்ஃப் உள்ளனர். இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடமாட்டார்கள் என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் திணறியது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் பந்தில் வேகத்தை கூட்டுவது அவசியம்.

பஞ்சாப் என்றாலே, ரசிகர்களின் நினைவுக்கு வருவது அதிரடிதான். அதற்கு காரணம் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர்தான். தற்போது இவர்களுடன் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.

தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் 28 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். கேஎல் ராகுல் (91), கிறிஸ் கெய்ல் (40) ஆகியோரின் அதிரடி வழக்கம்போல் தொடர்கிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை கடந்து பிரமிக்க வைத்துள்ளது. சென்னை அணியின் பந்து வீச்சு இவர்களை கட்டுப்படுத்துமா? என்பதே கேள்வி. பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் குறை உள்ளதை மறுக்க இயலாது.

மொத்தத்தில் பஞ்சாப் பேட்டிங்கை சிஎஸ்கே பந்து வீச்சு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் போட்டியில் வெற்றித் தோல்வி அமையும் என தெரிகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!