சாம்சங் நிறுவனத்தின் எம் வரிசை போன்கள் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஜனவரி 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாம்சங் எம்10 மற்றும் சாம்சங் எம் 20 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி 5ம் தேதி முதல் அமேசான்.இன் (amazon.in) மற்றும் சாம்சங்கின் விற்பனை இணையதளத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய துணை தலைவரான அஸிம் வார்ஸி, எம் வரிசை போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மற்ற நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கேலக்ஸி எம் 10 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.2 அங்குலம் ஹெச்டி வகை; 720 X 1520 தரம்
காமிரா: 13 எம்பி மற்றும் 5 எம்பி தரத்திலான இரண்டு காமிராக்கள் பின்பக்கம் உண்டு
இயக்கவேகம் : 2 ஜிபி மற்றும் 3 ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பிராசஸர்: 14 என்எம் ஆக்டாகோர் எக்ஸினோஸ் 7870 சிஸ்டம் ஆன் சிப்
பேட்டரி: 3400 mAh மின்னாற்றல்
சாதனத்தின் பரிமாண அளவு: 155.6X75.6X7.7 மிமீ
எடை: 160 கிராம்
எதிர்பார்க்கப்படும் விலை: 2ஜிபி/16ஜிபி போன் ரூ. 7,990; 3 ஜிபி / 32 ஜிபி ரூ. 8,990
கேலக்ஸி எம் 20 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.3 அங்குலம் ஹெச்டி வகை; 1080 X 2340 தரம்
காமிரா: 13 எம்பி மற்றும் 5 எம்பி தரத்திலான இரண்டு காமிராக்கள் பின்பக்கம் உண்டு
இயக்கவேகம் : 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பிராசஸர்: எக்ஸினோஸ் 7885 சிஸ்டம் ஆன் சிப்
பேட்டரி: 5000 mAh மின்னாற்றல்
சாதனத்தின் பரிமாண அளவு: 159X75.1X8.4 மிமீ
எதிர்பார்க்கப்படும் விலை: 3 ஜிபி / 32 ஜிபி போன் ரூ. 10,990; 4 ஜிபி /64 ஜிபி ரூ.12,990