சுவைக்க தூண்டும்.. சிக்கன் பெப்பர் 65 ரெசிபி

Tasty Chicken pepper 65 recipe ready

by Isaivaani, Feb 15, 2019, 09:00 AM IST

பொதுவா நாம் வீட்ல சிக்கன் 65 செய்வோம்.. சிக்கன் பெப்பர் 65 செஞ்சு இருக்கீங்களா.. ? சரி இப்போ சிக்கன் பெப்பர் 65 எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

கார்ன் ப்ளோர் - 2 டேபிள்ஸ்பூன்

சோம்பு - ஒரு டீஸ்பூன்

தயிர் - ஒன்றரை டீஸ்பூன்

சிக்கன் - ஒரு கிலோ

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகு - 25 கிராம்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 5

செய்முறை:

முதலில் சீரகம், பச்சை மிளகாய், மிளகு, சோம்பு ஆகிய நான்கையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பௌலில் சிக்கன் துண்டுகள், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மைதா, கார்ன் ப்ளோர், அரைத்து வைத்த விழுது ஆகியவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அத்துடன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பிரை பண்ணவும்.

சிக்கன் நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. பார்த்தாலே சுவைக்க தூண்டும் சிக்கன் பெப்பர் 65 ரெடி..!

You'r reading சுவைக்க தூண்டும்.. சிக்கன் பெப்பர் 65 ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை