யம்மி.. பால்கோவா வீட்டிலேயே செய்யலாம் வாங்க..

Yummy home made palkova recipe

by Isaivaani, Feb 17, 2019, 17:31 PM IST

வீட்டில் இருக்கும் சிம்பிள் இன்கிரிடீயன்ட்ஸ் வெச்சி வீட்டிலேயே பால்கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..


தேவையான பொருட்கள்:
பால் & 1 லிட்டர்
தயிர் & 1 கப்
சர்க்கரை & 100 கிராம்
நெய் & 5 தேக்கரண்டி
முந்திரி & 5 கிராம்
செய்முறை:
வாய் அகண்ட வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
பால் கொதி வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
பால் திரிந்து சுண்டும் வரை கிரண்டிக் கொண்டு நன்றாக கிளறவும்.
பால் மஞ்சள் நிறமாக மாறியதும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு, முந்திரியை நெய்யில் வறுத்து மிக்சியில் அரைத்து பொடி செய்யவும்.
இந்த முந்திரி பொடியையும் பாலில் சேர்த்து நன்றாக கிளறவும்.
பால் சுண்டும் பதத்திற்கு வந்ததும் அதில் 3 தேக்கரண்டி நெய் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால்கோவா தளதளவென இருக்கும்போதே இறக்கி விடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பால்கோவா ரெடி..!

 

You'r reading யம்மி.. பால்கோவா வீட்டிலேயே செய்யலாம் வாங்க.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை