சட்டுனு செய்யலாம் ருசியான பால் கோவா ரெசிபி

by Isaivaani, Jun 25, 2018, 17:19 PM IST

வீட்டுல திடீர்னு விருந்தாளி வந்துட்டாங்களா ? அவங்களுக்கு ஸ்வீட் செஞ்சி கொடுக்க ஆசைப்படறீங்களா.. நேரம் குறைவாக இருந்தாலும் பரவா இல்லை.. சிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்

தயிர் – சிறிதளவு

சர்க்கரை – 100 கிராம்

நெய் – 5 தேக்கரண்டி

முந்திரி – 5 கிராம்

செய்முறை:

வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும்.

பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும்.

முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும்.

சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும்.

10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகும். எனவே தளதளவென்று இறக்கினால் பின்பு இறுகி கோவா பதமாக இருக்கும்.

தற்போது ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி அதில் சுடான பால்கோவாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் வறுத்த முந்திரியை அதன் மீது பரப்பி அழகுபடுத்தினால் பால்கோவா ரெடி..

You'r reading சட்டுனு செய்யலாம் ருசியான பால் கோவா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை