ஜியோமி நிறுவனத்தின் மி9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் புகைப்படங்கள், ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்வீடனின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி 24ம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பிக்ஸல்களை ஒன்றாக தொகுக்கும் தொழில்நுட்பம் கொண்ட மி9 போனில் பின்புறம் மூன்று காமிராக்கள் இருக்குமாம். இக்காமிராக்கள் 48 எம்பி, 16 எம்பி மற்றும் 12 எம்பி ஆற்றல் கொண்டவையாக இருக்கும். முன்புற காமிரா 20 எம்பி ஆற்றல் கொண்டிருக்கும். குவல்காம் ஸ்நாப்டிராகன் 855 பிராசஸரில் இயங்கும். 5ஜி டேட்டா வசதிக்கு பயன்படுத்தக்கூடியதாகவும் மி9 அமையும்.
இயக்க வேகம் 6 மற்றும் 8 ஜிபி RAM கொண்ட போன்கள் 128 ஜிபி சேமிப்பளவுடனும், இயக்கவேகம் 8 ஜிபி RAM கொண்டவை 256 ஜிபி சேமிப்பளவு கொண்டவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கவேகம் 12 ஜிபி RAM கொண்ட போனும் அறிமுகம் செய்யப்படக்கூடும் என்றும் தகவல் பரவி வருகிறது. போன்களில் புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு இதன் வரவு நிச்சயமாகவே மகிழ்ச்சியை தரும்!