5ஜி ஆய்வகங்கள்: ஐந்து பெருநகரங்களில் அமைக்கிறது இன்போசிஸ்

Infosys launches solutions focused on 5G

by SAM ASIR, Feb 27, 2019, 15:44 PM IST

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை உலகை ஆக்ரமிக்கும் காலகட்டத்தை எட்டியுள்ளோம். 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படக்கூடிய தொழில் வாய்ப்புகளில் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய ஆய்வகங்களை இன்போசிஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது.


இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT) என்னும் பொருள்களின் இணையம், ஆகுமெண்டட் ரியாலிட்டி (AR) என்னும் புனை மெய்யாக்கம், வர்ச்சுவல் ரியாலிட்டி (VR) என்னும் மெய்நிகர் தோற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில் நிறுவனங்கள் இன்போசிஸ் ஆய்வகங்களின் உதவியை நாடலாம்.

இந்தியாவில் பெங்களூரு, அமெரிக்காவில் ரிச்சர்ட்சன் மற்றும் இண்டியானாபொலிஸ், ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் இன்போசிஸ் 5ஜி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

You'r reading 5ஜி ஆய்வகங்கள்: ஐந்து பெருநகரங்களில் அமைக்கிறது இன்போசிஸ் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை