வீட்டிலேயே நாம் சுவையான முந்திரி பிஸ்கெட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு & 225 கிராம்
வெண்ணெய் & 200 கிராம்
பொடித்த சர்க்கரை & 100 கிராம்
உப்பு & 1 சிட்டிகை
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் & அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு & 1 கப்
சாக்லேட் சிப்ஸ் & அரை கப்
செய்முறை:
ஒரு பௌலில், வெண்ணெய் போட்டு மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனுடன், சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட், மைதா மாவு, முந்திரி பருப்பு, சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இதனை, ஒவ்வொரு பிடியாக எடுத்து பிஸ்கட் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு ட்ரேவில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது பிக்கெட்களை ஒவ்வொன்றாக வைக்கவும்.
பின்னர், மைக்ரோவேவ் ஓவனில் 350 டிகிரி எப் சூட்டில் டிரேவை வைத்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் கிரிஸ்பியான முந்திரி பிஸ்கெட் ரெடி..!