வீட்டிலேயே எளிமையா செய்யக்கூடிய கோதுமை ஹல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையா பொருட்கள்:
கோதுமை மாவு & 150 கிராம்
தண்ணீர் & 1 லிட்டர்
சர்க்கரை & 400 கிராம்
நெய் & 170 மிலி
முந்திரி பருப்பு & கால் கப்
ஏலக்காய் தூள் & அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பொளலில் கோதுமை மாவு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு துணியால் மூடி சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இதன் பிறகு, மாவை தண்ணீருடன் நன்றாக பிசைந்து வடிகட்டி பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமா பாத்திரத்தில் வடிகட்டிய கோதுமை பாலை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
இதற்கிடையில், ஒரு வாணலியில் 100 கிராம் சர்க்கரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சூடு செய்து கரைக்கவும். இது காபி நிறத்தில் மாறியதும் இறக்கவும்.
இதன்பிறகு, வாணலியில் சூடாகிக் கொண்டிருக்கும் கோதுமை பாலில் 300 கிராம் சர்க்கரை மற்றும் கரைத்து வைத்த சர்க்கரை கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்.
இது முழுவதும் காபி நிறத்தில் மாறி கொஞ்சம் கெட்டியாக மாறும். பின்னர், ஒவ்வொரு ஸ்பூனாக நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஹல்வா கெட்டியாக மாறியதும் வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறி இன்னும் சிறிது நேரம் தீயில் வைத்து இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான கோதுமை ஹல்வா ரெசிபி ரெடி..!