பாஸ்ட்புட்டில் மூலதனத்தை கொட்டும் அமெரிக்கா... துரித உணவுகளால் அவதிப்படும் மக்கள்

மனித இனம் உணவு பழக்கவழக்கத்தில் அழிவை நோக்கிய பயணத்தில் நடைபோடுகிறது. பெருகி வரும் இயந்திரமயமாக்களால் மனிதர்கள் பயறு வகை தானியங்களை சாப்பிடக் கூட நேரமில்லாமல், சரிவிகித உணவினை தவிர்த்து பாஸ்ட்புட் எனப்படும் துரித உணவிற்கு மாறியுள்ளனர். புரதம், விட்டமின், கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது தேசிய சத்துணவுக் கழகம். பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பர்கர், பிசா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமானோர் குண்டர்களாக சத்தற்ற நோயாளிகளாக நீரழிவு நோய் நிபுணர் மருத்துவ மனைகளில் வரிசையில் காத்துக்கிடப்பார்கள்.

துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன என்று உல்லா உசிதாலோ, பிர்ஜோபையட்நென் மற்றும் பெக்கா புஸ்கா போன்ற ரஸ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மையுமே என்று கூறி அதற்குத் தகுந்தாற்போன்று உணவு முறையையும் உடற்பயிற்சியையும் முன்வைக்கிறது. உலகம் முழுவதும் துரித உணவு பரவி வருகிறது. இத்தகைய துரித உணவு உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்வதற்கே உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

1988 லிருந்து 1997 வரை ஆசிய நாடுகளில் இத்தகைய உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டாலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது. அதேபோல் லத்தின் அமெரிக்காவில் இடப்பட்ட அமெரிக்க மூலதனமானது 222 மில்லியன் டாலர்களிலிருந்து 3.3 பில்லியன் டாலர் வரை அதிகரித்திரிக்கிறது. இது விவசாயத்தில் அமெரிக்கா இடும் மூலதனத்தை விட அதிகமாகும். ஆக இவற்றிலிருந்து ஒரு விசயம் தெளிவாகிறது. உலக அளவில் உணவு உற்பத்தி சத்தற்ற ஊளைச் சதையர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது.மக்கள் உண்மையான சத்தைப் பெற ஏகாதிபத்திய நாடுகளும் , நிறுவனங்களும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள், பழங்கள் உண்பது இளைய தலைமுறையிடம் குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டின் எதிர்காலத் தூண்கள் நோய்ஞ்சான்களாகவும் ஊளைச் சதையர்களாகவும் மாறிவருகின்றனர். மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறம், பட்டினியால் பரிதவிக்கும் நோய்ஞ்சான்களாகவும் இன்னொருபுறம் வேண்டாத ஊளைச் சதையுடனும் அளவற்ற நீரழவு நோய் போன்ற தொற்று நோய் அல்லாத நோய்களுடன் மக்களை உருவாக்குகின்றன. இச்சதியை நாம் எப்போது புரிந்துகொண்டு விடுபடப் போகிறோம்.

உலகம் முழுவதும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டுக் கம்பனிகளும் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் MSG (Mono Sadium Glautamate ) என்னும் இரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீசா, பர்கர்,பிரைட்ரைஷ், நூடில்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகின்றது. MSG இன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோ தாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும்.

இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ணவேண்டுமென்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களை சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா, பீசா, குல்சா, பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் அஜினோமோட்டோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

7-thing-to-keep-in-mind-while-planning-your-career
எதிர்காலத்தில் ஏற்றம் பெற ஏழு வழிகள்
Parenthood-Why-parents-need-to-practice-self-regulation-not-self-control
தொல்லை தரும் பிள்ளைகள்: என்ன செய்யலாம்?
Negative-feedback-can-actually-benefit-employees
உயர்பதவிக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?
Womens-lifestyle-choices-that-give-way-to-illnesses
வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள்
Passive-smoking-poses-high-risk-to-pregnant-women-leads-to-miscarriage
புகை நமக்கு மட்டுமல்ல; கருவுக்கும் பகையே
4-Fs-of-Stress
எந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா?
5-Tips-To-Help-You-Exercise-Your-Brain
மூளை ஷார்ப்பா வேலை செய்யணுமா?
What-is-encephalitis-how-did-53-children-die-in-India
மூளைக்காய்ச்சல்: காரணங்கள், விளைவு, காப்பு முறைகள்
spouse-emotionally-unavailable
ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்
5-easy-homemade-scrubs-for-gorgeous-skin
அசத்தும் அழகு பெற எளிய வழிகள்

Tag Clouds